அனைவருக்கும் கல்வி வாய்ப்பை நிராகரித்துவிட்டு, அதையும் மீறி படிக்க வருபவர்களிடம் கொள்ளை நடத்த வழி ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைத் திட்டமான கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காது. #TNAgainstNEP2020 #RSS #NewEducationPolicy #rejectNEP2020
அனைவருக்கும் கல்வி வாய்ப்பை நிராகரித்துவிட்டு, அதையும் மீறி படிக்க வருபவர்களிடம் கொள்ளை நடத்த வழி ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைத் திட்டமான கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காது. #TNAgainstNEP2020 #RSS #NewEducationPolicy #rejectNEP2020
நாட்டின் தொழில் மற்றும் அறிவியல் தேவைகளைக் கணக்கில் கொள்ளாமல், தனியாரின் லாப நோக்கத்திற்கு ஏற்ப உயர் கல்வியை திறந்துவிடும் புதிய கல்விக் கொள்கை என்பது கொள்ளைக் கொள்கையே. #TNAgainstNEP2020 #Privatization #HigherEducation #NewEduactionPolicy #rejectNEP2020
உயர்கல்வியை முழுமையாக கட்டுப்படுத்தும் மத்திய அமைப்புகளை திணிக்க முயற்சிக்கும் (HECI, NHERC, NAC, HEGC) புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #HigherEducation #NewEducationPolicy #rejectNEP2020
ஏற்கனவே சுரண்டலுக்கு ஆளாகியுள்ள தனியார் கல்லூரி ஆசிரியர்களை மேலும் மேலும் அடிமையாக்கி, சுமை ஏற்படுத்தும் கல்விக் கொள்கையை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #PrivateCollege #rejectNEP2020 #NewEducationPolicy
பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காத புதிய கல்விக் கொள்கை, கட்டண அதிகரிப்பிற்குத்தான் வழிவகுக்கும். ஏழை மாணவர்களுக்கு எதிரான கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். #TNAgainstNEP2020
எந்த தொழில் வாய்ப்புக்கும் உதவாத கல்லூரியின் ஒவ்வொரு ஆண்டுக் கல்விக்கும் ஒவ்வொரு சான்றிதழ் என்ற ஏற்பாடு ஏமாற்றுத் திட்டமே. ஏமாற்றுத் திட்டத்தை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #CollegeEducation #rejectNEP2020
உள்நாட்டுக் கல்வியில் தனியார் பெரு நிறுவனங்களை அனுமதித்து, நமது கல்வித்திட்டத்தை மேலாண்மை செய்யவும், லாபம் குவிக்கவும் அனுமதிக்கும் கல்விக் கொள்கையை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #PrivateColleges #NewEducationPolicy #RejectNEP2020
தலித், பழங்குடியினர், மதவழி சிறுபான்மையினர், பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்டோருக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுவது பற்றியோ இட ஒதுக்கீடு பற்றியோ பேசாத கல்விக் கொள்கையை புறக்கணிப்போம். #TNAgainstNEP2020 #DalitPeoples #Reservation
உயர்கல்விக்கென்று நுழைவுத்தேர்வு நடக்கும். ஆனால் அந்த தேர்வைத் தாண்டி பல அளவுகோள்களை கல்வி நிறுவங்கள் வைத்துக் கொள்ளும். ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை வழிகள் அதில்தான் எத்தனை தடைகள். #TNAgainstNEP2020 #RejectNEP2020 #NewEducationPolicy
உயர்கல்வி ஏற்பாட்டில் மாநிலங்களுக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம். #TNAgainstNEP2020 #Education #NewEducationPolicy #RejectNEP2020
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டுமானம், ஆசிரியர் தரம், ஊதியம், அடிப்படை வசதிகளை உறுதி செய்யாமல், கல்வி நிறுவனங்களே கல்விக் கட்டணத்தை தீர்மானித்து கொள்ளைக்கு வழிவகுப்பதை கல்விக் கொள்கையாக ஏற்க முடியுமா? #TNAgainstNEP2020 #PrivatizationEducation #NewEducationPolicy #RejectNEP2020
ஏற்கனவே தனியார் கொள்ளைக்காடாக உள்ள உயர்கல்வி ஏற்பாட்டில், மென்மேலும் கொள்ளையை ஊக்குவிக்காதே. #TNAgainstNEP2020 #Privatization #NewEducationPolicy #RejectNEP2020
10ம் வகுப்புவரையிலான கல்வி என்பது ஒரு மாணாக்கர் முழுமையான குடிமக்களாவதற்கு அவசியமான ஒன்றாகும். ஏழை, எளிய மக்களை கல்வியிலிருந்து விரட்டும் கல்விக் கொள்கையை திரும்பப் பெற்றிடு. #TNAgainstNEP2020 #StateBoard #NewEducationPolicy #rejectNEP2020
தொழிற்கல்வியில் சாதித்த பல நாடுகளும் சிறப்பான பள்ளிக் கல்வியை உறுதி செய்த பிறகே தொழிற்கல்வியை வழங்குகிறார்கள். புதிய கல்விக் கொள்கையோ பள்ளிக்கல்வியையும் சிதைக்கிறது, திறன் பயிற்சியையும் ஆரம்ப நிலையில் மட்டுமே தருகிறது. #TNAgainstNEP2020 #VocationalCourse #NewEducationPolicy2020
தொழிற்கல்வியை உறுதி செய்திட வரைவு அறிக்கையில் இருந்த சில நல்ல ஏற்பாடுகளைக் கூட புதிய கல்விக் கொள்கை கைவிட்டுவிட்டது. உள்ளூர் நிறுவனங்களோடு இணைந்து நடுநிலைப் பள்ளியிலேயே தொழிற்கல்வி என்பது திறன் மேம்பாட்டுக்கு உதவாது. #TNAgainstNEP2020 ##VocationalCourse #NewEducationPolicy
தொழிற்கல்வி என்ற பெயரால் 10ம் வகுப்புக்கு முன்பே அறிமுகப்படுத்தும் பயிற்சி வகுப்புக்கள், கல்வியை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் அல்ல. கல்வியை சிதைப்பதற்கான ஏற்பாடே ஆகும். #TNAgainstNEP2020 #VocationalEducation #RejectNEP2020
இணைய வசதி எல்லோருக்கும் இல்லாத நாட்டில், ஆசிரியர் பயிற்சிக்கு இணையவழி ஏற்பாட்டை முன்வைப்பதே படு மோசமான சிந்தனையாகும். சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி தருவதும் இந்தக் கொள்கையில் இடம் பெறவில்லை. #TNAgainstNEP2020 #InternetFacility #StudentsEducation #rejectNEP2020
தரமான கல்விக்கு ஆசிரியர்கள் பயிற்சியில் கவனம் செலுத்தாமல், ஆசிரியர்கள் மீதும் தேர்வுகளைத் திணித்து இதுதான் தரம் என நம்பச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. கல்வியை சிதைக்கும் கல்விக் கொள்கையை திரும்பப் பெற்றிடு. #TNAgainstNEP2020 #NewEducationPolicy #QualifiedTeachers #Examination
தகுதியான ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகளை மாற்றி. ஆசிரியர் பயிற்சியிலும் பணம் செய்வதற்கான இலக்கினைத்தான் இந்தக் கொள்கை முன்வைக்கிறது. #TNAgainstNEP2020 #QualifiedTeachers #rejectNEP2020
அனைவருக்கும் கல்வி என்பது நாட்டுக்கு அவசியமான முழக்கம். படிப்படியாக வெளியேற்றம் என்பதுதான் கல்விக் கொள்கையின் முழக்கமாக இருக்கிறது. கல்விக் கொள்கையை திரும்பப் பெற்றிடு. #TNAgainstNEP2020 #RejectNEP2020