இது அந்த வினோத அனுபவத்துக்கு நேர் மாறானது.
அதே பாதைதான், அகே தூரம்தான். ஆனால் இம்முறை 150 கேட்டார் ஆட்டோ டிரைவர். வயதானவர், காது கேட்காதவர் என்பதால் ஒரு முறைக்கு மூன்று முறை இறங்க வேண்டிய இடம் சொல்லி ஏறிக் கொண்டேன். ஆனால் அவர் சரியாக கேட்டுக் கொள்ளவில்லை போலிருக்கிறது.
இறங்க வேண்டிய இடத்துக்கு 250 மீட்டர் முன்னால் திரும்பப் பார்த்தார். பதட்டமாக, அடுத்த யு டர்ன் என்றார். அவர் இங்கேதான் சொன்னீங்க என்றார். மூணு தடவை சொன்னேனே இதுக்கு அடுத்த கட்டிடம் அப்படின்னு, என்றேன். அப்படின்னா இன்னொரு ஐம்பது கொடுங்க என்றேன். இதென்ன அநியாயமா கேக்கறீங்க என்று சத்தம் போட ஆரம்பித்தேன், அவர் அழ ஆரம்பித்து விட்டார்.
அப்புறம் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டதும், 200 ரூபாய் கொடுத்தேன். காலங்காத்தால ஒருத்தரை அழ விட்டு என்ன சாதிக்கப் போகிறோம்? அவர் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களையும் கோபமாக உதறி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். ஆறுதலாக ஏதாவது சொல்லலாம் என்று நினைத்த நான், இந்த காசை வச்சுக்கிட்டு நான் என்ன பங்களாவா கட்டப் போறேன் என்று அவர் ஆரம்பித்ததும் இப்படி பிடிவாதமா இங்க வந்து இறங்கி 50 ரூபாய் கொடுத்ததுக்கு அங்கே 200 மீட்டர் முன்னாடியே இறங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் நகர்ந்தேன்.
https://thisisnow5.wordpress.com/2024/11/08/an-incident-of-pride/
#anger #egotism