பார்வையாளர்கள்
வாரம் 50 முதல் 60 முறை இந்த பதிவுகள் பார்வையிடப்படுகின்றன, பார்வையாளர்கள் ஒரு முப்பது நாற்பது பேர் இருக்கலாம்.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நான் ஓரத்தில் ஒதுங்கி நிற்பவன், நீங்கள் தேடி வந்தாலன்றி நான் எழுதுவதை பார்க்க முடியாது, அப்படி பார்த்தாலும் படிப்பவர்கள் சொற்பம் – என் நேர்த் தொடர்பு வட்டத்தில் இருக்கும் ஐந்தாறு பேர் தவிர யாருக்கும் இதில் ஆர்வமிருக்காது. அவர்களும் கூட பல விஷயங்களில் என்னிடமிருந்து முரண்படுபவர்கள்.
இதைச் சொல்ல ஒரு முக்கியமான காரணம், நானெல்லாம் ஒரு பெரிய ஆளில்லை, நீங்கள் சொன்னாலன்றி நான் சொல்வது வெளியே தெரியாது, நான் எழுதுவது யார் மனதையும் மாற்றப் போவதில்லை.
இது எனக்கும் ஒப்புதலாய் இருக்கிறது. நிறைய பேர் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் இந்த பிளாக்கை டெலீட் செய்தாலும் செய்வேன், அதற்குதான் வாய்ப்புகள் அதிகம்.
சில பல தனிப்பட்ட காரணங்களால் இந்த நேரத்தில் எனக்கு இந்த வடிகால் தேவைப்படுகிறது. மற்றபடி நான் க்ளவுட் தேடுபவனில்லை, இன்ஃப்ளூயன்சருமில்லை. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எழுத நினைப்பதை எழுதி மறக்கிறேன், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்புகிறேன்.
தனிப்பட்ட பகைமைகளும் வெறுப்புகளும் இல்லை என்று சொன்னால் நம்புவது கஷ்டம், ஆனால் அதுதான் உண்மை. பிடிக்காவிட்டால் புறக்கணித்து விடுங்கள்.
#disclosure #viewers #views